Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Karaveera Nathar Swamy Shiva Temple - Karaveeram, Thiruvaarur

அருள்மிகு ஸ்ரீ பிரத்தியட்ச மின்னம்மை அம்பாள் சமேத ஸ்ரீ கரவீரநாதர் சுவாமி திருக்கோவில், கரவீரம்


Karaveera Nathar Swamy Shiva Temple - Karaveeram, Thiruvaarur !!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ கரவீரநாதர் சுவாமி

இறைவி :ஸ்ரீ பிரத்தியட்ச மின்னம்மை அம்பாள்

தல மரம் :அலரி மரம்

தீர்த்தம் : அனவரத தீர்த்தம்

ThiruvarurDistrict_Karaveeranathar SwamyTemple-Karaveeram_shivanTemple


அருள்மிகு ஸ்ரீ பிரத்தியட்ச மின்னம்மை அம்பாள் சமேத ஸ்ரீ கரவீரநாதர் சுவாமி திருக்கோவில், கரவீரம் ,திருவாரூர்

கரவீரம் என்பது பொன்னிறப் பூக்களைத் தருகின்ற ஒருவகை மரத்தின் பெயர். பொன்னலரி என்றும் அதனைக் குறிப்பதுண்டு. ஒரு காலத்தில் பொன்னலரிக் காடாக இத்தலம் இருந்தது. பொன்னலரியைத் தலமரமாகக் கொண்டதால் இத்தலம் கரவீரம் என்று பெயர் பெற்றது. இங்குள்ள இறைவன் கரவீரநாதர் என்றும் பெயர் பெற்றார். இத்தல இறைவன பிரம்ம தேவனால் பூஜிக்கப்பட்டவர் ஆதலால் இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற் பெயரும் உண்டு.

தல வரலாறு:

இக்கோவிலில் கெளதம முனிவருக்கு தனி சந்நிதி உள்ளது. அமாவாசை நாட்களில் பெண்கள் கெளதம முனிவர் ஜீவசமாதியில் உள்ள தலவிருட்சத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு, பின் பிரம்மபுரீஸ்வரரை வழிபாடு செய்கிறார்கள். இதனால் அடுத்த அமாவாசைக்குள் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. ஆலயத்தின் தல விருட்சமான செவ்வரளி மரம் மேற்கு வெளிப் பிரகாரத்தில் இறைவன் சந்நிதி விமானத்திற்குப் பின்புறம் உள்ளது. இத்தலத்திற்கு வந்து தலவிருட்சமான செவ்வரளிக்கு 3 குடம் தண்ணீர் ஊற்றி, அம்பாளின் திருப்பாதத்தில் 3 மஞ்சள் கிழங்கு வைத்து வழிபட வேண்டும். பிறகு இந்த மஞ்சளை தண்ணீரில் கரைத்து அந்த நீரில் நேய்வாய்ப்பட்ட குழந்தைகளை குளிப்பாட்டினால் நோய் குணமாகும்.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள இப்பதிகம் முதல் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. திருஞானசம்பந்தர் இத்தலம் வந்த போது இருட்டிவிட்டதால், இரவு தங்கி மறுநாள் இறைவனை பாடியுள்ளார். சம்பந்தர் தான் பாடிய ஒவ்வொரு பாடலிலும் இப்பெருமானை வழிபட்டால் வினைகள் யாவும் நீங்கும் என பாடியுள்ளார். எனவே பக்தர்கள் ஏதேனும் ஒரு இரவில் இங்கு தங்கி மறுநாள் இறைவனை வழிபாடு செய்தால் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் நீங்கி விடும் என்பது ஐதீகம்.

திருக்கோயில் முகவரி :

அருள்மிகு ஸ்ரீ பிரத்தியட்ச மின்னம்மை அம்பாள் சமேத ஸ்ரீ கரவீரநாதர் சுவாமி திருக்கோவில், கரவீரம்
அருள்மிகு கரவீரநாதர் திருக்கோயில்,
கரையபுரம்,
மணக்கால் ஐயம்பேட்டை அஞ்சல்,
திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம், PIN - 610104.



திருக்கோயில் திறக்கும் நேரம்:

இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்



அமைவிடம்:

திருவாரூரில் இருந்து மேற்கே 10 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வடகண்டம் என்ற ஊரின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கரையபுரம் செல்லும் வழி என்று கேட்டு அவ்வழியில் சென்றால் கோவிலை அடையலாம். கோவில் வரை வாகனங்கள் செல்லும். கோவில் வெட்டாற்றங்கரையில் அமைந்துள்ளது.